செய்திகள்,முதன்மை செய்திகள் தற்கொலை செய்து கொண்ட வக்கீல் …

தற்கொலை செய்து கொண்ட வக்கீல் …

தற்கொலை செய்து கொண்ட வக்கீல் … post thumbnail image
போளூர் அடுத்த, அத்திமூர் கிராமத்தை சேர்ந்த கோபால் மகன் வக்கீல் முருகன், 37. இவர், சில ஆண்டுகளுக்கு முன், போளூர் பகுதியில் இருந்து, சென்னை சென்று குடும்பத்துடன் வசித்து வந்தார். சென்னை, சிட்லப்பாக்கம் பகுதியில் வசித்த இவருக்கு, அங்குள்ள ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் கள்ளகாதலி வீட்டில் இல்லாத போது, அவரது, ஒன்பது வயது மகளை, முருகன் பாலியியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக, சிட்லப்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த, 12ம் தேதி, தினமும் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், என்ற நிபந்தனையுடன் வக்கீல் முருகன் ஜாமீனில் வெளியே வந்தார்.

இரண்டு நாட்கள் கையெழுத்திட்ட அவர், போளூருக்கு வந்து ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள, ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். நேற்று முன்தினம் காலை வரை, அவரது அறை கதவை திறக்காததால், சந்தேகமடைந்த ஊழியர்கள், ஜன்னலை திறந்து பார்த்த போது, பெட்ஷீட்டில் தூக்கு போட்டு இறந்து கிடந்தார். போளூர் போலீஸார், முருகனின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி