இதையடுத்து அனைத்து மாணவிகளையும் வீட்டுப் பாடம் எழுதிவரச் சொல்லி அவற்றை மொத்தமாக வாங்கி சரிபார்த்தார். அப்போது தான் விரும்பிய மாணவியின் நோட்டு புத்தகத்தில் 8 பக்க காதல் கடிதத்தை ஒரு கவருடன் வைத்து விட்டார். அத்துடன் 500 ரூபாய் நோட்டையும் உள்ளே வைத்து இருந்தார்.
மாணவிகள் அனைவரும் தங்களது நோட்டுக்களை திரும்ப பெற்றுக் கொண்டனர். ஆனால் ஆசிரியர் விரும்பிய மாணவி தனது நோட்டில் கவர் இருப்பதை கண்டு அதை பிரித்துப் பார்த்தார். அதில் காதல் கடிதமும் ரூ.500–ம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.உடனே பெற்றோரிடம் சென்று ஆசிரியர் எழுதிய கடிதம் பற்றி தெரிவித்தார். அவர்கள் மாணவியுடன் பள்ளிக்கு வந்து முதல்வரிடம் புகார் தெரிவித்தனர். பின்னர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி