வீட்டிற்கு வந்த போது தாயும், தம்பியும் தண்ணீர் டிரம்மிற்குள் மூழ்கி இருப்பதை பார்த்து, பாட்டி பழனியம்மாளிடம் தெரிவித்தான். கிராமத்தினர் வந்து பார்த்த போது, குழந்தை இறந்திருந்தது. ஜெயலட்சுமி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். உறவினர்கள் நிலக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதித்ததில், இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஜெயலட்சுமியின் அண்ணன் சுப்பிரமணியன், தனது தங்கையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கருணாகரன் விசாரித்தார். சந்தேகத்தின் பேரில் முருகவேலின் பெரியப்பா மகன் பாண்டிவேலை, வயது 21, விசாரித்த போது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அவரது வாக்குமூலத்தில்,”அண்ணன் மனைவி ஜெயலட்சுமியை ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினேன் மறுத்து தகராறு செய்தார். இதில் ஆத்திரமடைந்து, ஜெயலட்சுமியை கழுத்தை நெரித்து கொலை செய்து, டிரம்மிற்குள் தள்ளி விட்டேன். அப்போது குழந்தை அழுததால் குழந்தையையும் கொலை செய்தேன்” என தெரிவித்துள்ளார். போலீசார் பாண்டிவேலை கைது செய்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி