தமிழில் ஐயா படம் முலமாக என்ட்ரியானவர் நயன்தாரா, அதன்பின், கிளாமராக நடித்த அவர் , அஜீத்துடன் நடித்த, பில்லா படத்தில், நீச்சல் உடையில் நடித்தார்.
இதனால், தமிழக இளவட்ட ரசிகர்களின் பி.பி., எகிறி நின்றது. ஆனால், அதன்பின், சந்தர்ப்பங்கள் அமையாததால், நீச்சல் உடை பிரவேசத்துக்கு தற்காலிகமாக முட்டுக் கட்டை போட்டார்.தற்போது, தெலுங்கில் நடிக்கும் புதிய படமொன்றில், மீண்டும், நீச்சல் உடை நாயகியாக உருவெடுத்துள்ளார்.
அங்கு, சீதை வேடத்தில் நல்லதொரு இமேஜை ஏற்படுத்தி வைத்திருக்கும் நயன்தாராவுக்கு, அதை கெடுக்க மனமில்லை.இருப்பினும், ஆந்திராவில் தற்போதைய நடிகைகளின் கவர்ச்சிப் போட்டி கடுமையாக இருப்பதால், மார்க்கெட்டில் தாக்குப் பிடிக்கவே, நீச்சல் உடையில் நடிக்க, சம்மதம் கூறியுள்ளாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி