கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்‘ போன்ற படங்களில் நடித்திருப்பவர் சிவகார்த்திகேயன். தனுஷ் தயாரித்த ‘எதிர்நீச்சல்‘ படத்திலும் ஹீரோவாக நடித்தார். அப்படத்தில் ஒரு பாடலுக்கு நயன்தாராவை ஆட ஒப்பந்தம் செய்தார்கள்.
அதைக் கேட்டு சிவகார்த்திகேயன் குஷியானார். ‘நெனச்சிகூட பாக்கல நயன்தாராவோட நடிப்பேன்னு தேங்க்ஸ் தனுஷ் சார்‘ என்று அவருக்கு நன்றி சொன்னார். உடனே தனுஷ், ‘நயன்தாரா நடிக்கிறாங்க, ஆனா அவரோட டான்ஸ் ஆடப்போறது நீ இல்ல, நான்‘ என்று பதில் அளித்ததும் சோர்ந்து போனார் சிவகார்த்திகேயன். வாய்ப்பு வந்தும் அவருடன் நடிக்க முடியாடதால் கவலைப்பட்டாராம்.
இந்நிலையில் மான் கராத்தே படத்தில் ஹன்சிகாவுடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனாலும் நயன்தாராவுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் தனது நெருக்கமான நண்பர்களிடம் கூறிவருகிறார் .
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி