விஸ்வரூபம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஆண்ட்ரியா. தற்போது விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் அன்னயும் ரசூலும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் இயக்குனர் அஜீத் பிள்ளை தான் இயக்கும் முசாயிலே குதிர மீனுகள் என்ற படத்தில் ஆண்ட்ரியா நடிப்பதாகவும், லட்சத்தீவில் வசிக்கும் பெண்வேடம் ஏற்க உள்ளதாகவும் கூறினார். அத்துடன் பட ஹீரோ ஆசிப் அலியுடன் ஆண்ட்ரியா ஜோடியாக இருப்பதுபோன்ற போட்டோக்களும் வெளியிட்டார்.
இந்நிலையில் படத்திலிருந்து விலகுவதாக ஆண்ட்ரியா தெரிவித்தார். கால்ஷீட் பிரச்னை காரணமாக படத்திலிருந்து ஆண்ட்ரியா விலகிவிட்டதாக அவரது மேனேஜர் தெரிவித்தார். ஆனால் இயக்குனருடன் ஏற்பட்ட மோதலால்தான் ஆண்ட்ரியா வெளியேறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆண்ட்ரியாவுக்கு பதிலாக மற்றொரு பிரபல நடிகையை இயக்குனர் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி