இலங்கை பாணந்துறையைச் சேர்ந்த 48 வயதான கமராலலாகே சந்திரசிறிக்கு எதிராக தம் 10 வயது மகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது.
நீதிமன்ற விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இக்கொடுஞ்செயலைச் செய்தமைக்காக கம்பஹா நீதிமன்றம் 100 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 90000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்ச ரூபாய் ஈட்டுத் தொகையும் வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
ஒரு குடும்பத்தில் தந்தை என்பவர் முக்கிய அங்கமாக கருதப்படுகிறார். பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது தந்தையின் கடமையாகும். அவ்வாறான கடமையும் பொறுப்பும் உடைய தந்தை மகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்துவது சமூகத்தினால் நிராகரிக்கப்பட வேண்டிய செயலாகும். என தீர்ப்பில் நீதிபதி தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி