புத்தாண்டை வரவேற்க நள்ளிரவில் ஹோட்டல்களில் நடக்கும் பெரிய பார்ட்டிகளில் நடிகர், நடிகைகளை ஆட வைப்பது வழக்கமாகிவிட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் ஆட மார்க்கெட் இல்லாத நடிகை முதல் முன்னணி நடிகை வரை அனைவருமே பெரும்தொகையை சம்பளமாக கேட்கிறார்கள்.டிசம்பர் 31ம் தேதி இரவு சென்னையில் நடக்கும் புத்தாண்டு பார்ட்யில் ஆட நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.6 கோடி கொடுக்கப்படுகிறதாம்.
7 நிமிடம் ஆட ரூ.6 கோடி என்பது கொஞ்சம் ஓவர் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நினைத்தனர். ஆனால் டிக்கெட் வருமானம் மூலம் அதை சரி கட்டிவிடலாம் என்று நினைத்த அவர்கள் ரூ.6 கோடி கொடுக்க சம்மதித்துவிட்டார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி