சீயான் விக்ரமின் கேரியரில் ஷங்கரின் அந்நியன் முக்கியத்துவம் வாய்ந்த படம். ஏற்கனவே கமலை வைத்து ஷங்கர் இயக்கிய இந்தியன் படத்தைப்போன்று இதுவும் சமூக களை எடுக்கப்பட்ட படம்தான்.என்றபோதும், புதிய பாணியில் இப்படம் உருவாக்கபட்டிருகிறது
அதோடு, அந்நியனுக்காக மூன்றுவிதமான கெட்டப்புகளில் நடித்திருந்தார் விக்ரம்.ஆனபோதும், ஒன்றோடு ஒன்று ஒட்டாத வகையில் மாறுபட்ட வடிவம், நடிப்பு என கொடுத்து நடிப்பில் பல படிகள் உயர்ந்து நின்றார் விக்ரம். அதனால்தான் நண்பன் படத்தையடுத்து தான் இயக்கும் ஐ படத்துக்கும் விக்ரமை புக் பண்ணினார் ஷங்கர்.
அதையடுத்து, தரணி உள்பட சிலரிடம் கதை கேட்டு வைத்திருப்பவர் அப்படங்களில் ஒவ்வொன்றாக நடிக்கப்போகிறாராம். ஆனால், ஐ படத்துக்காக உடம்பை அடையாளமே தெரியாத அளவுக்கு மாற்றியிருப்பதால், தனது பழைய உடம்பை கொண்டு வருவதற்காக சில மாதங்கள் ஓய்வெடுக்கப்போகிறாராம் விக்ரம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி