செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் தங்கம் குறைந்தது: நவரத்தினம், ஆபரணங்கள் அதிகரித்தது..

தங்கம் குறைந்தது: நவரத்தினம், ஆபரணங்கள் அதிகரித்தது..

தங்கம் குறைந்தது: நவரத்தினம், ஆபரணங்கள் அதிகரித்தது.. post thumbnail image
தொடர்ந்து மூன்றாவது மாதமாக அக்டோபரில் நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி 36 சதவீதம் அதிகரித்து ரூ.19,800 கோடியாக உயர்ந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டைவிட இந்தாண்டு 5325 கோடி வித்தியாசத்தில் நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது….

தங்கம் இறக்குமதி குறைந்துள்ள நிலையில் ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய மாதங்களில் நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி அதிகரித்ததுள்ளது ..

நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கும் வகையில் தங்கம் இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது மத்தியஅரசு. மேலும் இறக்குமதி செய்யப்படும் தங்கம் கட்டாயமாக 20 சதவீதம் ஏற்றுமதி செய்யவேண்டும் என்றும் அறிவித்துள்ளது.. .

கடந்த சில மாதங்களாக ஏற்றுமதி அளவு அடிப்படையில் சரிவடைந்தது.இருப்பினும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது…
பண்டிகைகாலங்களில் ஆர்டர்கள் அதிகரித்துள்ளது…
நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி முந்தைய இரு மாதங்களை காட்டிலும் 15 சதவீதம் அதிகரித்து இருக்கலாம் என ஏற்றுமதி மேம்பாட்டு குழுவின் தலைவர் விபுல்ஷா தெரிவித்தார்..

நடப்பு நிதி ஆண்டில் நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி சென்ற ஆண்டை போல் 3,900 கோடி டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.. இதில் தங்க ஆபரணங்கள் பங்களிப்பு 50 சதவீதமாக உள்ளது..வைரம் மற்றும் இதர நவரத்தினங்கள் மற்றும் வண்ண கற்கள் மீத பங்கினை கொண்டுள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி