ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் விஷ்னுவர்த்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி உள்ளிட்டோர் நடிப்பில் ஆரம்பம் திரைப்படம் கடந்த 31ஆம் தேதி உலகம் முழுவதும் 22 நாடுகளில் வெளியானது. இதன் மூலம் தமிழ்படமொன்று அதிக நாடுகளில் வெளியான திரைப்படம் என்ற பெருமையை ஆரம்பம் பெற்றது. ஆரம்பம் படம் ரிலீஸான முதல் வாரத்திலேயே ரூ.50 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் படம் தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.
ரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஆரம்பம் உலகம் முழுவதும் ரூ.91.63 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படம் விரைவில் ரூ.100 கோடியை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆரம்பம் படம் தெலுங்கில் வரும் 21ம் தேதி ரிலீஸ் ஆகிறது. தெலுங்கு டப்பிங் உரிமை ரூ.6 கோடிக்கு பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி