திரையுலகம்,முதன்மை செய்திகள் அமலா பாலுக்கு “அல்வா”

அமலா பாலுக்கு “அல்வா”

அமலா பாலுக்கு “அல்வா” post thumbnail image
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடித்த வெற்றி படங்களில் ஒன்றான “ரமணா” திரைபடத்தை “காப்பர்” என்ற பெயரில் இந்தியில் புதிதாக தயாராகிறது. இந்த படதில்ஸ் அக் ஷய் குமார் கதாநாயனாக நடிக்கிறார்.

தமிழ் ரமணா படத்தில் சிம்ரன் நடித்திருந்த வேடத்தில் நடிக்க, முதலில் அமலா பாலை தான் பாலிவுட்டில் இருந்து அணுகினார்களாம். இதற்காக பாலிவுட் சென்று படு உற்சாகத்துடன் புகை பட தேர்வில் கலந்து கொண்ட அமலா பால் அழைப்பு இன்னைக்கு வரும் நாளைக்கு வரும் என வழி மேல் விழி வைத்து காத்துக்கிடந்தார். ஆனால், படத்தின் வியாபாரம் கருதி, அந்த வேடத்துக்கு கத்ரீனா ஒப்பந்தம் செய்து விட்டதாக செய்தி தான் வந்தவுடன் ரொம்பவே அதிர்சிக்கு ஆளாகி விட்டாராம்.

அமலா பாலுக்கு , தமிழ், தெலுங்கு, மொழிகளில், பெரிய அளவில் தற்பொழுது திரைப்படங்கள் இல்லாததால், தன் தாய்மொழியான மலையாளத்தில் தஞ்சமடைந்துள்ளார். பாலிவுட்காரர்களை கண்டாலே கடித்து துப்பி விடுவார் போல் இருக்கிறது. இந்தியில் வந்த முதல் வாய்ப்பே நழுவிப்போனதால், இனி இந்திப் பட வாய்ப்பு தேடி வந்தாலும் கூட ஏற்க மாட்டேன்” என புலம்பி தவிக்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி