தமிழ்நாடு புகையிலைக் கட்டுப்பாட்டு கூட்டணி அமைப்பின் அமைப்பாளர் எஸ் சிரில் அலெக்சாண்டர் கூறுகையில், “புகையிலை மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்களுக்கு எதிரான மிக வெற்றிகரமான விளம்பரத்தை சந்தானம் கிண்டலடித்துள்ளார். குட்காவுக்கு எதிரான விளம்பரத்தில் வரும் முகேஷ் நிஜமாகவே புகையிலையால் பாதிக்கப்பட்டு இறந்தவர். அவரது குரலை இமிடேட் செய்வது சரியா? புகையிலை மற்றும் புகைப் பழக்கத்தை விட்டொழிப்பது கேவலமான செயல் என்பதைப் போல சந்தானத்தின் கிண்டல் அமைந்துள்ளது. இந்த காட்சி நிச்சயம் நீக்கப்பட வேண்டும். புகைப்பழக்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளோரை சந்தானத்தின் இந்த கிண்டல் பாதித்துள்ளது. மேலும் இது புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் பிரிவு 5-க்கு எதிரானதும் கூட,” என்றார்.
இது குறித்து மேலும் பல புகார்கள் வந்த கொண்டிருப்பதால் நிச்சயம் இந்த காட்சிகள் இந்த திரைப்படத்தில் இருந்து நீக்கப்படும் போல் தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி