அஜீத்தின் ஆரம்பம் படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் நடித்த மங்காத்தா படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்தது. அதற்கு முன்பு நடித்த பில்லா 2 படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படம் தமிழில் வெளியாகும் அதே நேரத்தில், தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட உள்ளது. தெலுங்கில் இதற்கு ‘ஆட்டம் ஆரம்பம்’ என பெயர் வைத்திருக்கிறார்கள். முதலில் தமிழில் கூட ஆட்டம் ஆரம்பம் என பெயர் வைப்பதாகத்தான் இருந்தது. ஆனால் ஆரம்பம் என்று வைத்துவிட்டனர். அஜீத் நடித்த பில்லா, மங்காத்தா இரண்டுமே தெலுங்கில் சூப்பர்-டூப்பர் ஹிட்டானதால், தற்போது ஆரம்பம் படத்திற்கும் ஆந்திராவில் பலத்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாம்.
அஜீத் படம்னா சும்மா வா…ரசிகர்களின் ஆர்வமும் ஆரவாரமும் பட்டையை கிளப்பப்போகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி