திண்டுக்கல்லில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. குவாரி போன்று பெரிய அரங்கமைத்து படப்பிடிப்பைத் தொடங்கினார்கள். படப்பிடிப்பு தொடங்கி எட்டுநாட்களில் படப்பிடிப்பை ரத்துச் செய்துவிட்டு சென்னை திரும்பிவிட்டார்களாம். அதற்குக் காரணம் முதல்நாளிலிருந்தே இயக்குநரின் நடவடிக்கைகளில் கதா நாயகன் விஜய் சேதுபதிக்குத் திருப்தி அளிக்கவில்லையாம். ஒரு காட்சியை படமாக்கிவிட்டு அது சரியாக வந்திருக்கிறதா இல்லையா என்பதையே தீர்மானிக்கத் தெரியாமல் அவர் தடுமாறுகிறாராம் இயக்குனர் சுதாகர் மேலும் காட்சிகளை மிகவும் மெதுவாக எடுக்கின்றார் என்று விஜய் சேதுபதி ஒரே புலம்பலாம். எட்டுநாட்கள் படப்பிடிப்பு நடந்திருந்த நிலையில் இரண்டுகாட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டிருந்ததாம். ஒரே நாளில் இரண்டுகாட்சிகள் மூன்று காட்சிகள் என்று இயக்குனர்கள் கலக்கி கொண்டிருக்கும் போது எட்டுநாட்களில் இரண்டுகாட்சிகள் என்பதால் எல்லோருக்கும் கடும் அதிர்ச்சியாம். இயக்குநர் மிக மெதுவாகச் செயல்படுவதைப் பார்த்த விஜயசேதுபதி, அவரைத் தனியே அழைத்து நிறைய அறிவுரைகள் வழங்கினாராம். அவற்றையெல்லாம் செவிமடுக்க இயக்குநர் தயாராகவே இல்லையாம். இதனால் மனம்நொந்த விஜயசேதுபதி, படப்பிடிப்பை நிறுத்திவிடுவோம், சென்னைக்குப் போய் எல்லாவற்றையும் சரியாகத் திட்டமிட்டுக்கொண்டு மீண்டும் வருவோம் என்று சொல்லி படப்பிடிப்பை நிறுத்திவிட்டாராம். இந்தப்படம் தொடர்ந்து நடக்கும் என்பது சந்தேகம் என்றே அந்தப்படக்குழுவினர் பலரும் சொல்கிறார்கள். யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள் எப்படி விஜய் சேதுபதி சொதப்பினார் என்று பட குழுவினர் அதிசயிக்கிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி