தொடர்ச்சியாக கதை கேட்டு கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷ், இப்போது பென்சில் என்ற படத்தில் நடிப்பதற்காக சிக்கி இருக்கிறார். இப்படி தான் இளைய இசையமைப்பாளர் அனிருத் தானும் நடிக்க போவதாக பயமுறுத்திக் கொண்டிருந்த போது நம்ம சூப்பர் ஸ்டார் தலையிட்டு நம்மை காப்பற்றினார்.
சாட்டை பட பாணியில் பள்ளிக்கூட மாணவர்களின் பிரச்னையை மையமாகக்கொண்டு உருவாகும் பென்சில் திரைப்படத்தில் ப்ளஸ்-2 மாணவனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார்.
ப்ரியாஆனந்த் தான் கதாநாயகி என்று சொல்லிக் கொண்டிருந்தனர், என்ன ஆனது என்று தெரியவில்லை, அவருக்குப் பதிலாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த தெலுங்கு நடிகை ஸ்ரீதிவ்யாவை ஒப்பந்தம் செய்து இருகிறார்கள். ஸ்ரீதிவ்யா நடித்த முதல் படமே சூப்பர் ஹிட் என்பதோடு, அப்படத்தில் இடம்பெற்ற ஊதா கலரு ரிப்பன் என்ற பாடலும் செம ஹிட் ஆனதால், அதே பாணியில் இந்த படத்தில் ஒரு பாடலும் வைக்க திட்டமிட்டுள்ளாராம் ஜி.வி.பிரகாஷ்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி