நம்ம பிரதமர் 4 நாள் சுற்று பயணமா அமெரிக்கா போயிருக்கார் என்னடா இந்த திடீர் சுற்றுப்பயணம்னு பார்த்த அந்த அரத பழசு அணுசக்தி கொள்முதல் விவாகரத்திற்கும் அப்படியே நாட்டை வள்ளரசு ஆக்குவதற்கு ஒரு பெரிய பட்டியலை கொடுப்பதற்கும் தான்.
- அப்பாச்சி அட்டாக் ஹெலிகாப்டர்கள் – 22
- சினூக் ஹெவி லிப்ட் ஹெலிகாப்டர்கள் – 15
- சி 130 ஜே ஹெர்குலிஸ் மீடியம் லிப்ட் விமானங்கள் – 6
- எம் 777 அல்ட்ரா லைட் டோவ்ட் ஹோவிட்சர்கள் – 140
இதை எல்லாம் வாங்கிட்டு வந்துட்டா… இந்தியா ஒரு வள்ளரசு ஆயிடும்….
நாம என்னதான் பிராந்திய அளவில் பெரிய “அப்பாடக்கர்னு” காட்டிக் கொண்டாலும் நமக்கு ரஸ்யா,இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தான் ஆஸ்தான ஏற்றுமதியாளர்கள், அவர்களிடம் இருந்து தான் ஆயுதங்களையும், உபகரணங்களையும் நாம் இறக்குமதிதான் செய்து கொண்டிருக்கிறோம். பொது மக்களின் வரிபணத்தில், நமது ஆயுத தேவையில் 30 சதவீதத்தை உள்நாட்டு உற்பத்தியில் பூர்த்தி செய்து கொள்கிறோம். அதிலும் பல திட்டங்கள் படு தோல்வியில் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி