புதுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூன் 12-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட அதிமுக, தேமுதிக, ஐ.ஜே.கே. என ஏகப்பட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன திமுக, கம்யூனிஸ்ட், மதிமுக போட்டியிடவில்லை என அறிவித்துவிட்டன. புதுக்கோட்டை இடைத் தேர்தலில் ஆளும் அதிமுகவை ஆட்டம் காண வைக்க தேமுதிகவும் திமுகவும் ரகசிய கூட்டணி அமைக்க உள்ளதாக அரசல் புரசலாக செய்தி வருகிறது
விஜயகாந்தின் தே.மு.தி.க. புதுக்கோட்டை இடைத் தேர்தலில் ஆதரவு தருமாறு தி.மு.கவை கேட்கும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மச்சான் சுதீஷ் பகிரங்கமாக தெரிவித்துள்ளார் அவர் அந்த கட்சியின் இளைஞரணி செயலாளர் என்பது கூறுப்பிடத்தக்கது. தேமுதிக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளதாலும், புதுக்கோட்டை தொகுதியில் ஓரளவு முஸ்லீம் மக்கள் உள்ளதாலும், தங்களது வேட்பாளர் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் தேமுதிக இம்முறை பலத்த நம்பிக்கையோடு தேர்தல் களம் இறங்கியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமரன் மறைவு சம்பவமும், அந்த இடத்தில் அதிமுக போட்டியிடுவதும் தங்களது சாதகம் என தேமுதிக கருதுகிறது. இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் மனதார அதிமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள், தங்களுக்கே வாக்களிப்பார்கள் என தேமுதிக மிக உறுதியாக நம்புகிறது.
தேமுதிகவுக்கு ஆதரவு தருவதன் மூலம் அரசியல் நட்பு பலப்படும் என்று திமுக பலமாக நம்புகிறது. மேலும், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியான தேமுதிகவும், மற்றொரு பலம் வாய்ந்த கட்சியான திமுகவும் ஓரணியில் நின்றால் அதிமுகவை ஈசியாக சமாளித்து விடலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது. திமுகவின் ராஜதந்திர காய் நகர்த்தலால் அதிமுக சற்றே உஷாராக இருபதாகவும்,தேமுதிகவுடன் திமுக சேர்ந்தால் வரும் ஜனாதிபதி தேர்தலின் போது, தேமுதிகவை காங்கிரஸ் பக்கம் வளைத்து விடலாம். அது மட்டுமல்ல, ராஜ்யசபா தேர்தல் வரும் போது, தேமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குகளை திமுகவிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது திமுகவின் அதிரடி திட்டம் எப்படி நடக்க போகிறது என்று பார்போம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.