சென்னை: சிம்பு, பிரபுதேவா என இருவரிடமிருந்தும் பிரிந்துள்ள நயன்தாரா, நீண்ட நாட்களுக்கு பின்னர் நடிக்க வந்துள்ளார். ஆனால் மீண்டும்நயன்தாராவின் பெயர் அடிபட ஆரம்பித்திருகிறது. நயன்தாராவுடன் காதல் இல்லை என்றும் தாங்கள் நட்புடன் பழகுவதாகவும் நடிகர் ஆர்யா கூறியுள்ளதிலிருந்து எந்த அளவிற்கு கோடம்பாக்கத்தில் இந்த செய்தி பரவி இருக்கிறது என்பது விளங்கும்.
ஆர்யா, தான் கட்டிய புது வீட்டிற்கு நயன்தாராவை சிறப்பு விருந்தினராக அழைத்ததாகவும் அங்கு நடந்த நிகழ்ச்சியில் அவரை மட்டுமே ஆர்யா விஷேடமாக கவனித்ததாகவும் கூறப்பட்டது. இந்த சம்பவத்தை காரணமாக வைத்தே நயன்தாராவும் ஆர்யாவும் காதலிக்கின்றனர் என்ற தகவல் காட்டு தீயாக பரவியுள்ளது.
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து ஆர்யா கூறியதாவது, நானும் நயன்தாராவும் நண்பர்கள். காதலினால் மனம் முறிந்த அவருக்கு ஒரு ஆறுதல் கிடைக்க வேண்டும் என்று எண்ணியே அவரை விருந்திற்கு அழைத்து உபசரித்தேன் என்றார். தற்பொழுது நயன்தாரா அஜீத் நடிக்க உள்ள புதிய படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுதாபம் தான் காதலாக மாறும் என்பது ஆர்யாவிற்கு தெரியும்….என்ன நடக்க போகிறதோ…
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.