தமிழகத்தில் உள்ள அணைத்து கட்சிகளும் தி.மு.க., அ.தி.மு.க. உள்பட இலங்கை விவகாரத்தை வைத்து அரசியல் செய்வது வாடிக்கை இந்த நிலையில், விஜயகாந்தின் தேமுதிக தனது சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண்பாண்டியனை இலங்கைக்கு எந்த வித முன் அறிவிப்புமின்றி, சத்தம் போடாமல் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கை பயணம் என்பது இந்திய அரசியல்வாதிகளுக்கு ஒரு பொழுதுபோக்கு….பொதுவாக இலங்கைக்கு பயணம் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் போன்றவர்கள், மத்திய அரசு அனுமதி பெற்று தூதுக்குழுக்களில் இணைந்து செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். பொதுமக்கள் பணத்தில் கும்மியடிப்பதே அவர்களது வழக்கம். வெற்றிகரமாக இலங்கை பயணத்தை முடித்தவுடன், மன்மோகன்சிங் மற்றும் மகிந்த ராஜபக்ஷே மனம் நோகதவாறு ஒரு அறிக்கை விட்டு அடுத்த இலங்கை உல்லாச பயணத்திற்கு தயார் ஆகிவிடுவார்கள்.
உளவுத்துரை வயிற்றில் புளி(லி)யை கரைத்த தேமுதிகவின் இலங்கை பயணம்
தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக ரகசியமாக இலங்கை சென்று அங்கு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தாக கூறப்படுகின்றது.
கொழும்பில் இருந்து வந்த தகவல்….
அருண் பாண்டியன் தனிப்பட்ட முறையில் ஒரு மாத விசிட் விசாவில், வந்துள்ளதாக தெரிய வருகிறது. குறிப்பாக, திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஐங்கரன் இன்டர்நேஷனல் தலைவர் கருணாமூர்த்தியுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார். கருணாமூர்த்தி ஈழத் தமிழர் ஆவார் என்பது நினைவிருக்கலாம். பல சூப்பர் ஹிட் தமிழ்ப் படங்களைத் தயாரித்துள்ளவர் கருணாமூர்த்தி. யாழ்ப்பாணம் வந்த, அருண் பாண்டியன், இணுவில் என்ற கிராமத்தில் தங்கியிருந்தார். அப்போது, பொது மக்கள் பலரையும் அவர் சந்தித்துப் பேசினார். யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மிக முக்கியமான புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார். தமிழ் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் இருவர், அவரைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகின்றது என்கின்றனர்.
விஜயகாந்தின் ஆர்வம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இலங்கை விவகாரத்தில் மிக ஆர்வமாக உள்ளதாகவும், அதனால் தான் தனது நம்பிக்கைகுரிய நட்சத்திரம் அருண்பாண்டியன் மூலம் சில தகவல்களை பெற்று வர பணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அருண் பாண்டியன் தமிழகம் வந்த பின்பு, இலங்கையில் ஈழ தமிழர்களின் நிலையை புதுக்கோட்டை இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் புட்டுவைக்கப் போவதாகவும் ஒரு தகவல் உலா வருகின்றது.
இதை ரொம்பவே லேட்டாக மோப்பம் பிடித்த தமிழக உளவுத்துறை கடும் அதிர்ச்சி அடைந்து அது குறித்த தகவல்களை விரைவாக சேகரித்து வருகின்றது. ஆளும்கட்சிக்கு தான் முழுஉரிமையும் இலங்கை பற்றி பேச அதை எப்படி தேமுதிக எடுத்துக் கொள்ளலாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.