டெல்லியில் லூக்போம்ஸ்பேர்ச் மது அருந்திவிட்டு தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அமெரிக்கப் பெண் ஒருவர் புகார் கொடுத்திருந்தார். இப்புகார் மனுவைத் தொடர்ந்து லூக் கைது செய்யப்பட்டார். அவருக்கு 1 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் லூக் மீது பாலியல் புகார் கொடுத்த அமெரிக்கப் பெண் இப்போது அந்த அணியின் உரிமையாளர் விஜய்மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
விஜய் மல்லையா மகன் சித்தார்த் மல்லையா, லூக் சம்பவம் பற்றி கருத்து தெரிவிக்கையில் புகார் கொடுத்த பெண்ணின் நடத்தையைப் பற்றி விமர்சித்திருந்தார். தம் நடத்தையைப் பற்றி விமர்சித்ததற்காக சித்தார்த் மல்லையா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் டெல்லி மகளிர் ஆணையத்திடமும் இது பற்றி அந்தப் பெண் புகார் அளிக்க உள்ளதாக தகவல்.
லூக் விவகாரத்தில் தனக்கு தானே ஆப்படித்து கொண்ட சித்தார்த் மல்லையா மற்றொரு சிக்கலிலும் மாட்டியிருக்கிறார். டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக ஐதராபாத் விமான நிலையத்துக்கு நேற்று ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வந்திறங்கியது. அப்போது டுவிட்டர் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி ரொம்பவே டென்ஷனாகிப் போனார் சித்தார்த் மல்லையா. யாரும் என்கிட்ட வராதீங்க.. என்று கடுப்படிக்க பத்திரிகையாளர்களோ மீடியாக்களிடம் இப்படி நடக்காதீங்க என்று கூறினர்.. ஆனால். கார் கதவைத் திறந்த சித்தார்த் அப்படித்தான் செய்வேன் என்று எகிறினார் இதனால் கோபத்தின் உச்சிக்குப் போனார்கள் அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.