நடப்பு ஐ.பி.எல் 5வது தொடரின் இறுதிக் கட்டத்தில் சர்ச்சை மேல் சர்ச்சை வெடித்து வருகிறது. ஸ்பாட் பிக்சிங், ஷாருக்கான் ரகளை என இந்த வரிசையில் இடம்பிடித்திருக்கிறது அடுத்த கசமுசா ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் லூக்போமர்ஸ்பேச்சின் பாலியல் தொந்தரவு கைது நடவடிக்கை.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லூக்போமர்ஸ்பேச் நடப்பு ஐ.பி.எல். 5வது தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார், நேற்று டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடனான போட்டிக்குப் பிறகு ஹோட்டலுக்கு திரும்பி சென்ற லூக்போமர்ஸ்பேச் விருந்து ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அமெரிக்கப் பெண்ணிடம் லூக்போமர்ஸ்பேச் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தட்டிக் கேட்ட அவரது ஆண் நண்பரை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அப்பெண்ணும் அவரது நண்பரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டனர்.
லூக்போமர்ஸ்பேச் மீது டெல்லி போலீசில் அந்த அமெரிக்க பெண் புகார் கொடுத்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த டெல்லி போலீசார் அவரை கைது செய்தனர். இன்று அவருக்கு டெல்லி நீதிமன்றம் நாளை வரை ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. பாலியல் புகாரில் சிக்கிய லூக்கை அணியில் இருந்து விலக்கியுள்ளதாக பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.