விளையாட்டு ஷாருக்கானுக்கு வாழ்நாள் தடை

ஷாருக்கானுக்கு வாழ்நாள் தடை

ஷாருக்கானுக்கு வாழ்நாள் தடை post thumbnail image
Shahrukh khan with knight riders promotion

காணொளி:-

நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் கொல்கத்தா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் வெற்றிக் களப்பில் மிதந்த ஷாருக்கான் தமது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மும்பை கிரிக்க்ட் சங்கத் தலைவர் விலாஸ்ராவ் தேஷ்முக் பற்றி அவதூறாகப் பேசியுள்ளார். ஷாருக்கானின் பாதுகாவலர்கள் மைதான காவலர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இதனால் மும்பை வான்கடே மைதானத்துக்குள் நுழைய நடிகரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளருமான ஷாருக்கானுக்கு வாழ்நாள் தடை விதிப்பதாக மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

மும்பை கிரிக்கெட் சங்க பொருளாளர் ரவிஷாவந்த் இச்சம்பவம் பற்றி கூறுகையில், ஷாருக்கான் மும்பை கிரிக்க்ட் சங்க பாதுகாவலர்கள், நிர்வாகிகள், தலைவர் வ்லாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோரை அவதூறாகவும் அவமதித்துப் பேசினார். அவரை வாழ்நாள் முழுவதும் இந்த மும்பை வான்கடே மைதானத்துக்குள் நுழைய தடை விதிக்க முடிவு செய்திருக்கிறோம் என்றார் அவர்.

இச்சம்பவம் தொடர்பாக ஷாருக்கானை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் மும்பை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.