அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் தமிழக அரசுக்கு புளி(லி)யை கரைக்கும் சீமான் அறிவிப்பு

தமிழக அரசுக்கு புளி(லி)யை கரைக்கும் சீமான் அறிவிப்பு

naam tamilar party leader Seeman

காணொளி:-

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் தினமான மே 18 அன்று கோவையில் பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற உள்ளது. தமிழினப் படுகொலைகளுக்கு நியாயம் கோரி இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு

”இலங்கையில் பூர்வீகக் குடிகளான தமிழினச் சொந்தங்களின் விடுதலை போராட்டத்தை அழிக்க தெற்காசிய வல்லாதிக்கங்களின் துணையுடன் சிங்கள அரசு நடத்தி முடித்த இனப்படுகொலை போர் முடிக்கப்பட்ட நாள் மே 18.

3 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில், தமிழினத்தின் மீது தொடுக்கப்பட்ட நியாமற்ற அந்த போரில் படுகொலை செய்யப்பட்ட 1 1/2 லட்சம் மக்களின் உறவுகளுக்கு இதுவரை நியாயம் கிட்டவில்லை.தமிழனப் படுகொலை நடந்த 3-வது ஆண்டு நினைவு நாளான மே 18-ம் நாளன்று, தமிழினப் படுகொலைக்கு நியாயம் கோரி கோவையில் நாம் தமிழர் கட்சி மாபெரும் பேரணியையும், பொதுக் கூட்டத்தையும் நடத்துகிறது.

நம் இனத்தின் விடுதலை எனும் இலக்கை எட்ட இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது. அதற்கு இனத்தின் ஒன்றுமையும், ஒன்றுபட்ட செயலாற்றலும் மிகவும் அவசியமானதாகும்.இனத்தின் வலிமை உறுதிப்படுத்த வாருங்கள் கோவையை நோக்கி, பல்லாயிரக்கணக்கில் திரண்டு இனத்தின் எழுச்சியை உலகிற்கு பறைசாற்றுவோம். மக்களின் எழுச்சியே மாற்றத்திற்கான அரசியல் புரட்சி என்பதை நிரூபிப்போம்.

மே 18 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் சிலை அருகே கூடி, அங்கிருந்து பேரணியாய் புறப்பட்டு சிவானந்தா காலனியை அடைவோம். அங்கு நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் இனத்தின் மீட்சிக்கான நடவடிக்கை தீர்மானங்களை நிறைவேற்றுவோம்.”

இவ்வாறு சீமான் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.