முல்லை பெரியாறு அணை தொடர்பாக நெடுங்காலமாக பல பொய்களை கேரளா அரசு கடைந்தெடுத்த உண்மை போலவே பரப்பிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் கேரளா அரசின் முழு ஆதரவுடன் வெளி வந்து ஊத்தி மூடிய திரைப்படம் DAM 999 , இதில் அந்த அணை உடைவது போலவும், மக்கள் மோசமாக இறப்பது போலவும் சித்தரிக்கபட் டு கேரளா மக்களின் வயிற்றில் புளியை கரைக்க வைத்தது. ஆனால் இனியும் அந்த கதை பலிக்குமா என்பது கேள்விக்குறியே…
கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே முல்லை பெரியாறு அணை தொடர்பாக நடக்கும் மோதலில் புதிய திருப்பமாக உச்ச நீதிமன்றத்தால் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆராய அனுமதிக்கப்பட்ட நிபுணர் குழு முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து பரம திருப்தி தெரிவித்துள்ளது.
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்றும் எப்போதும் உடையும் ஆபத்து இருப்பதால் புதிய அணை கட்டப்பட வேண்டும் என்றும் கேரளா கூறி வந்தது முழுக்க முழுக்க பொய் என்பது இப்பொழுது அதிகாரபூர்வமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அணையின் பாதுகாப்பு குறித்து ஆராய ஐந்து நபர் கொண்ட நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது அவர்கள் அணை பலமாக இருப்பதாக அறிக்கை தந்துள்ளனர்.
தமிழகமோ தற்போது உள்ள நீர் அளவின் மட்டத்தை 142 அடிக்கு மேல் உயர்த்த வேண்டும் என்று கூறியது. தன் ஆயுவுக்கு பிறகு நிபுணர் குழு அணையின் பாதுகாப்பு பலமாக இருப்பதாகவும் நீர் மட்டத்தை உயர்த்தலாம் என்றும் கூறியுள்ளது. அதே சமயத்தில் தமிழகம் சம்மதித்தால் கேரளா புதிய அணையை கட்டலாம் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒன்று போதாதா கேரளாவிற்கு “பழைய குருடி கதவை திறடி” என்பதற்கு….
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி