தனி ஈழத்தை உருவாக்கி விட்டுத் தான் உயிர் துறப்பேன் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி சூளுரைத்துள்ளார்.
வடசென்னை தி.மு.க சார்பில் பெரவள்ளூரில் நேற்றிரவு இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர், “அண்ணா, காந்தி வழியில் அறப்போராட்டம் நடத்தி தமிழீழம் கிடைக்கப் போராடுவேன். தனி ஈழம் அமைப்பதற்கு, 1980களில் உருவாக்கப்பட்ட டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கத்தை மீண்டும் தொடங்க வேண்டும். அந்த இயக்கம், தி.மு.க.வின் துணை இயக்கமாகச் செயலாற்றி தனித் தமிழீழம் உருவாகப் பாடுபடும்.
தந்தை செல்வாவின் வழியில் – வன்முறையற்ற வழியில் அமைதியிலான போராட்டம் அங்கு புதிய வடிவம் பெறும்.சிறிலங்கா அதிபர் இதனை நிராகரிக்கலாம். ஆனால் இது தான் எனது எஞ்சிய வாழ்நாளின் இலட்சியம். தனித் தமிழீழத்தை உருவாக்கி விட்டு தான் நான் இவ்வுலகை விட்டுச் செல்வேன்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை தனி ஈழம் குறித்துப் பேச கருணாநிதிக்கு தகுதியில்லை என மதிமுக பொதுச் செயலர் வைகோ சாடியுள்ளார்.
ஈழத்தில் தமிழர்களை அழிக்க அனைத்து வகையிலும் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு உதவி செய்தது. மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் அதற்குத் துணைபோயின. இலங்கைக்கு ஆயுத உதவி செய்தபோதோ, படுகொலைகள் அரங்கேறிய போதோ அவற்றைத் தடுத்து நிறுத்தக் குரல் கொடுக்காமல் மௌனம் காத்தார் கருணாநிதி. ஆனால், இப்போது தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று குரல் எழுப்புகிறார்.
தனி ஈழம் குறித்துப் பேச அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை. என்றார் வைகோ.
பின்ன என்னங்க…சண்டை நடந்தப்ப சும்மா இருந்துட்டு இப்ப இப்படி கதை விட்டா காமடியா இல்ல…
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி