திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, கட்சித் தலைவர் விஜயகாந்த் கொடுத்துள்ள பிறந்த நாள் பரிசாகும் என்று கூறியுள்ளார் தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.
நேற்று மாலை அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு வந்த பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையிலான தேமுதிக குழுவினர் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுக்களை மேற்கொண்டனர்.
ஒரு வழியாக அதிமுகவைத் தேடி தேமுதிக வந்ததைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்களும், கூடவே தேமுதிக தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அதிமுக அலுவலகத்திற்கு வெளியே கூடியிருந்த அவர்கள் மகிழ்ச்சி கோஷங்களை எழுப்பினர்.
கிட்டத்தட்ட 75 நிமிடங்கள் பேச்சு நடந்தது. பின்னர் வெளியில் வந்த பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில்,
இரு கட்சிகளும் வரும் பேரவைத் தேர்தலை சந்திப்பது குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் முதல் சுற்று பேச்சு சுமுகமாக நடந்தது. மீண்டும் அடுத்த சுற்று பேச்சு விரைவில் தொடங்கும்.
தமிழக மக்களின் விருப்பம், எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் எதிர்கட்சிகள் அனைத்தையும் ஒரே அணியில் திரட்டி, தேர்தலைச் சந்திக்க உள்ளோம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற வகையில்தான், மக்களின் விருப்பப்படி அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர தே.மு.தி.க. முன் வந்தது. இது வெற்றிக் கூட்டணி.
எத்தனை தொகுதிகள் முக்கியம் என்பதைவிட, தி.மு.க.வை ஆட்சியில் இருந்து வீழ்த்துவதே லட்சியம்.
கூட்டணியில் இணைய வந்ததன் மூலம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் பரிசை அளித்துள்ளார்.
நாங்கள் ஆட்சியில் பங்கும் கேட்கும் திட்டத்தில் எல்லாம் இல்லை. தொகுதிப் பங்கீடு குறித்து முடிவு செய்த பின்னர் ஜெயலலிதாவை, விஜயகாந்த் சந்திப்பார் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.