தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனின் தற்கொலைப் படைகளை விட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் குழுவினர் மிகவும் திறமை வாய்ந்தவர்கள் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் உரையாற்றியபோது இவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு:-
”புலிகளின் குண்டுகள் ஓய்ந்து இரு வருடங்கள் ஆகின்றன.
ஆனால் அரசின் வெடிகுண்டு தயாராகவே உள்ளது. அது தற்போது வெடிக்க உள்ளது. இக்குண்டு காரணமாக இந்நாட்டு மக்கள் தினமும் மரணிப்பர்.
புலிகளின் குண்டு இரண்டு மாதத்துக்கு ஒரு தடவை எங்காவது சந்தியில் போடப்படும். 30, 40 பேர் உயிர் இழப்பர். இன்னும் சிலர் காயமடைந்து வைத்தியசாலைக்குச் செல்வர். அவ்வளவுதான்.. ஆனால் அரசின் வெடிகுண்டு அப்படி அல்ல.
இக்குண்டு எந்நாளும் வெடிக்கும். நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இக்குண்டால் பாதிக்கப்படுவர். எல்லா வீடுகளிலும் இக்குண்டு வெடிக்கும் இக்குண்டின் பெயர்தான் வாழ்க்கைச் சுமை.இக்குண்டில் அகப்பட்டதும் மரணம்தான்.
இக்குண்டு அழிந்து விடாது. தொடர்ந்து இருந்து கொண்டே ஆட்களை கொல்லும். பிரபாகரனிடம் தற்கொலை குண்டுதாரிகள் 300 பேர் இருந்தனர். அவர்கள் இறந்து எங்களையும் கொல்வர். மஹிந்த ராஜபக்ஸ்விடம் 145 குழுக்கள் உள்ளன. அக்குழுவைச் சேர்ந்தவர்கள் புலிகளை விட சாமர்த்தியமானவர்கள்.
பொதுமக்களைக் கொன்று விட்டு அவர்கள் உயிர் வாழ்வார்கள்.”
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.