சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு தடையை மீறி பேரணியாக செல்ல முயன்ற தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட ஆயிரக்கணக்கானனோர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ள நாகை மீனவர்கள் 106 பேரை விடுவிக்கக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாப்பூரில் இருந்து புறப்பட்ட பேரணி ஆழ்வார்பேட்டை உள்ள இலங்கை தூதரகம் அருகே செல்வதற்கு முன்பே காவல்துறையினர் கனிமொழி உள்பட ஆயிரக்கணக்கான தி.மு.க.வினரை தடுத்து கைது செய்தனர்.
அப்போது இலங்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ததோடு அந்நாட்டு அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.