அரசியல்,முதன்மை செய்திகள் திமுகவிற்கு ஆப்பு…விஜயகாந்துடன் காங்கிரஸ் கூட்டணி…?

திமுகவிற்கு ஆப்பு…விஜயகாந்துடன் காங்கிரஸ் கூட்டணி…?

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema

Vijayakanth open statement

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியுள்ள டி.பி.ரியாலிட்டி நிறுவனம் மூலம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி பணம் போனது குறித்து அந்தத் தொலைக்காட்சியின் பெரும்பான்மையான பங்குகளை வைத்துள்ள முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினரிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டிய நிலை விரைவில் வரலாம் என்பதால், திமுகவுடனான கூட்டணி முறியலாம் என காங்கிரஸ் கருதுவதாக செய்திகள் பரவியுள்ளன.

இதனால் தேமுதிக தலைவர் விஜய்காந்துடன் ரகசிய பேச்சுவார்த்தைகளில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

திமுகவிடம் 90 இடங்கள், ஆட்சியில் பங்கு என்று நிபந்தனை போட்டுள்ளார் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி. ஆனால், தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின்போது இதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று திமுக கூறியுள்ளது.கூட்டணியில் பாமக இணைந்தால் காங்கிரசுக்கு 50 இடங்கள், அவர்கள் வராவிட்டால் 65 இடங்கள் வரை தர திமுக திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஆனால், இந்த விஷயத்தில் திமுகவை நெருக்கவோ என்னவோ டெல்லி அரசியல் வட்டாரங்களில் ஒரு தகவலை காங்கிரஸ் பரப்பிவிட்டுள்ளது. அதாவது, விஜய்காந்துடன் கூட்டணிக்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது என்பது தான் இந்தத் தகவல்.

காங்கிரஸ் அமைத்த ஐவர் குழுவைச் சேர்ந்த ப.சிதம்பரம், வாசன் ஆகியோர் நேற்று முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேச்சு நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில், விஜய்காந்த் அனுப்பி வைத்த தூதர் டெல்லியில் காங்கிரஸ் தலைமையுடன் பேச்சு நடத்திக் கொண்டிருந்ததாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் செய்தி பரவியது.

அதே போல திமுகவை வலுவிழக்கச் செய்யவே கூட்டணியில் பாமகவை சேர்க்க வேண்டாம் என்று அவர்களிடம் காங்கிரஸ் கூறியதாகவும், அதே நேரத்தில் பாமகவுடன் காங்கிரஸ் தலைவர்கள் தனியாக பேச்சு நடத்தி வருவதாகவும் செய்தி பரப்பப்பட்டுள்ளது.

அதாவது திமுகவை கடைசி நேரத்தில் கழற்றிவிட்டுவிட்டு தேமுதிக-பாமகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கலாம் என்று தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து விவரமாக அறியாத டெல்லியை மையமாகக் கொண்ட மீடியாக்கள் இதை இன்று பெரிய அளவில் செய்தியாக வெளியிட்டுள்ளன.

இது குறித்து திமுக தரப்பில் கூறுகையில், இதை யார் பரப்பியது என்பதும் ஏன் பரப்பினார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும். எங்களிடம் அதிக இடங்களை வாங்குவதற்காகவும் ஆட்சியில் பங்கு தரப்படும் என்ற உறுதிமொழியை எங்களிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பெறவும் காங்கிரஸ் மேற்கொள்ளும் மீடியா தந்திரம் இது. இதையெல்லாம் எங்கள் தலைவர் சமாளிப்பார் என்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.