இந்திய கிரிக்கெட் அணி யின் முன்னாள் கேப்டன் கங்குலி கடந்த 3 ஐ.பி.எல். போட்டியிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடியுள்ளார். 4-வது ஐ.பி.எல். போட்டி யில் அவரை நீட்டித்துக் கொள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் விரும்பவில்லை. இதனால் பெங்களூரில் 2 நாட்கள் நடந்த ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் கங்குலி இடம் பெற்றார்.
அவருக்கு ரூ.1.84 கோடி அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கங்குலி விலை போகவில்லை. அவரை வாங்க 10 அணிகளுமே ஆர் வம் காட்டவில்லை. 2-வது சுற்று ஏலத்தில் அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்பட எந்த அணியும் வாங்க வில்லை.
கொல்கத்தா அணியில் கங்குலி இடம் பெறாததால் அவரது ரசிகர்கள் கொதிப் படைந்தனர். மண்ணின் மைந்தனை ஏலத்தில் எடுக் காததால் அவர்கள் கொல் கத்தா நைட் ரைடர்ஸ் அணி யின் உரிமையாளர் நடிகர் ஷாருக்கானுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவரது கொடும்பாவியை எரித்தனர். கங்குலி ரசிகர் ஒருவர் கூறும் போது கங்குலி இல்லாமல் கொல்கத்தா கிரிக்கெட் அணி இல்லை. இது அரசியல் சதி என்றார். கங்குலி ரசிகர்களின் போராட்டம் காரணமாக அவர் கொல்கத்தா அணியில் இடம் பெற்றுள்ளார்.
அவரை திரும்ப அழைக்க ஷாருக்கான் விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது கங்குலி இல்லாமல் கொல்கத்தா அணி இல்லை. அவரை சந்தித்து எங்கள் அணியில் இடம் பெறுவது தொடர்பாக பேசுவேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.