அரசியல் இலவசங்களை வாங்க மாட்டோம்…நடக்குற காரியமா இது…

இலவசங்களை வாங்க மாட்டோம்…நடக்குற காரியமா இது…

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

வரும் சட்டசபை தேர்தலில் “இலவசங்களை வாங்க மாட்டோம்” என மக்கள் நினைத்தால் மட்டுமே நேர்மையான தேர்தல் நடக்கும் என, தமிழக முன்னாள் தேர்தல் அதிகாரி திரு.நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
“கண்ணியமான தேர்தல் 2011” என்ற அமைப்பு சார்பில், சமூக ஆர்வலர்களின் கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாட்டில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, “கண்ணியமான தேர்தல் 2011” என்ற கூட்டமைப்பின் மூலமாக, தமிழகம் முழுவதும் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் பணங்கள் மற்றும் இலவசங்களால் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதை தடுக்கும் வகையில், விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார். இதற்காக, ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது.

அக்குழுவில், ஓய்வுபெற்ற கலெக்டர்கள் தேவசகாயம், அம்புரோஸ் மற்றும் வக்கீல்கள், மருத்துவர்கள் என பலர் உள்ளனர். இக்குழுவினர், தமிழகம் முழுவதும் சென்று, அங்குள்ள பொதுமக்களைச் சந்தித்து பணம் மற்றும் இலவசங்களுக்கு ஓட்டுக்கள் விற்கப்படுவது குறித்தும், அதனால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கின்றனர்.

வாக்களிக்கும் பொதுமக்கள் ஜனவரி 10ம் திகதி வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில், தங்கள் பெயர் உள்ளதா என்பதை பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று குப்தா கூறினார்.

வாக்காளர்கள் தங்கள் ஓட்டுக்களை பணத்திற்கு விற்காமல், பயனுள்ள வேட்பாளருக்கு, கட்சிக்கு போட வேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும். யாருக்கும் ஓட்டளிக்க விரும்பம் இல்லாதவர்களுக்காக, யாருக்கும் ஓட்டளிப்பதில்லை என்ற 49 (0) படிவத்தை ஓட்டு பதிவு இயந்திரங்களில் கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஓட்டுப்பதிவு சதவீதத்தை உறுதி செய்ய முடியும் என்று அவர் தெரிவித்தார்.

அரசியல் கட்சியினர் மீது குற்றம் சாட்டுவதை விட்டு விட்டு, பொதுமக்கள் நேர்மையாக நடந்து “ஓட்டிற்கு பணம் வாங்க மாட்டோம்” என்ற உறுதிமொழி எடுத்தால் தான் பணநாயகம் இல்லாத ஜனநாயகம் உருவாகும் என்று அவர் கூறினார்.

அதேநேரத்தில், சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைத்து அரசியல் கட்சிகள் போட்டியிட்டால் தான் நல்ல ஜனநாயகம் மலரும் என்றும் அதனால், இலவசங்கள் கொடுத்து மக்களை திசை திருப்பும் முயற்சியை அரசியல் கட்சிகள் கைவிட வேண்டும் என்றும் திரு. நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.