வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடன் இலங்கை ஆயுத கொள்வனவுகளில் ஈடுபட்டால் பொருளாதாரத் தடையினை விதிப்போம் என அமெரிக்கா 2009 இல் இலங்கையினை எச்சரித்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தின் படி வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடன் ஆயுத வியாபாரம் செய்ய கூடாது எனவும் அப்படி செய்யும் நாடுகளுக்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்கப்படும் படவேண்டும் என்பதும் ஐக்கிய நாடுகள் சபையின் திர்மானமாக இருக்கின்றது.
இதனை இலங்கைக்கு ஞாபகமூட்டியே அமெரிக்கா மிரட்டியது. ஆனால் இலங்கை அமெரிக்காவிற்கு காதில் பூ வைத்துவிட்டு தேவையான ஆயுதங்களை ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்தது. இதனை தமது உளவு அமைப்பின் ஊடாக அறிந்து வைத்திருந்தது. இந்த நிலையிலேயே அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தாலும். இலங்கைக்கான அமெரிக்க தூதர் இந்த விடயத்தில் மிகவும் உன்னிப்பாக இருக்கவில்லை எனவும் விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
Comments are closed.