அரசியல்,முதன்மை செய்திகள் சிங்களவனின் தற்பெருமை…அவமானத்தில் முடிந்தது

சிங்களவனின் தற்பெருமை…அவமானத்தில் முடிந்தது

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

நேபாளத்தில் அமைதி ஏற்படுத்த ராஜபக்சேவிடம் நேபாளம் உதவி கோரப்பட்டதாக வெளியான பொய்யான தகவலுக்கு மன்னிப்பு கேட்டது இலங்கை.

இலங்கை வெளியுறவுத் துறை இணையமைச்சர் நாமல் பெரேர, நேபாளத்திடம் மன்னிப்பு கோரியதாக நேற்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் நேபாளம் சென்றிருந்தபோது அந்நாட்டு அதிபரை நாமல் நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

நேபாள அதிபர் ராம்பரன், தமது நாட்டில் அமைதியை ஏற்படுத்த உதவுமாறு இலங்கை அதிபர் ராஜபக்சேவை பீஜிங்கில் சந்தித்தபோது கேட்டுக்கொண்டார் என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் முன்பு கூறியிருந்தார். தற்போது அவரது கூற்றுக்காக வெளியுறவுத்துறை இணையமைச்சர் நேபாளத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும், மன்னிப்பு கேட்கப்பட்ட தகவலை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் இலங்கை அமைச்சர் தரப்பில் நேபாள அரசிடம் வேண்டுகோள் விடுத்தாராம். ஆனால் அதையும் மீறி செய்தி கசிந்துவிட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி