அரசியல்,முதன்மை செய்திகள் சக்கையாய்(ஊழலில்) கசக்கிய ராசாவை வெளியே பிடித்து தள்ள திமுக ரெடி…

சக்கையாய்(ஊழலில்) கசக்கிய ராசாவை வெளியே பிடித்து தள்ள திமுக ரெடி…

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

சிபிஐ, அதைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு விசாரணை என்று அடுத்தடுத்து முக்கிய விசாரணைகள் நடைபெறவுள்ளதால், முன்னாள் அமைச்சர் ராஜாவுடனான தொடர்பை முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் துண்டித்துக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சிபிஐ ஒரு வேளை ராஜா மீது வழக்குப் பதிவு செய்தால், உடனடியாக அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்றும் பேச்சு அடிபடுகிறது.

ராஜாவுடனான திமுக தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், தங்களை எந்த வகையிலும் தொடர்பு கொள்ள வேண்டாம் என திமுகவின் முக்கியத் தரப்பிலிருந்து ராஜாவுக்கு அறிவுறுத்தல் போயுள்ளதாக கூறப்படுகிறது. தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ளக் கூடாது என்று ராஜாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு விசாரணை முதல்வர் வீடு வரை வந்து விடாமல் தவிர்க்கவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கிறார்கள்.

சமீபத்தில்தான் முதல்வர் கருணாநிதியை சந்தித்தார் ராஜா. இருப்பினும் நேற்று டெல்லி கிளம்புவதற்கு முன்பு மீண்டும் முதல்வரை சந்திக்க விரும்பினாராம் ராஜா. ஆனால் அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த துண்டிப்பு தற்காலிகமானதே என்றும் திமுக தரப்பு தகவல்கள் கூறப்படுகின்றன. விசாரணைகள் முழுமையாக முடிந்த பின்னர் இந்த தடை நீங்கும் என்று கூறப்படுகிறது. அதேசமயம், ஒரு வேளை விசாரணைக்குப் பின்னர் ராஜா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தால் உடனடியாக அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்றும் திமுக தரப்பில் பேசப்படுகிறது.

மேலும், வெளியில் ராஜாவுக்கு ஆதரவாக பேசுமாறு திமுகவினருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தாலும் கூட தனிப்பட்ட முறையில் ராஜாவுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என ரகசிய உத்தரவு போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. விசாரணைகள் முடியும் வரை இதைக் கடைப்பிடிக்குமாறும் அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனராம்.

திமுக தரப்பில் ராஜாவை நீக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தீர்மானமாக உள்ளனர்.

திமுகவில் பெரும்பாலானோரின் கருத்தும் இதுவே. இருப்பினும் ராஜாவை நீக்கினால் திமுகவுக்குத்தான் கெட்ட பெயர் என்று திமுகவில் ஒரு பிரிவினர் கூறுகின்றனராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி