அரசியல்,முதன்மை செய்திகள் ஊழல் கறைபடியாத காங்கிரஸ் தலைவி சோனியா,பாஜக மீது கடும் பாய்ச்சல்

ஊழல் கறைபடியாத காங்கிரஸ் தலைவி சோனியா,பாஜக மீது கடும் பாய்ச்சல்

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

ஊழல் குறித்துப் பேச பாஜகவுக்கு அருகதையே கிடையாது. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து ஜேபிசி விசாரணை நடத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறி விட்டார்.

இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம் தொடங்கியது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை சமாளிப்பது குறித்து சோனியா தீவிர ஆலோசனை நடத்தினார்.

பின்னர் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டத்தில் அவர் பேசும்போது, நாடாளுமன்றத்தை முடக்கும் பாஜகவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

சோனியா காந்தி பேசுகையில், டெஹல்கா, கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குடும்பமே நில ஊழலில் ஈடுபட்டது ஆகியவற்றை பாஜக மறந்து விடக் கூடாது. எனவே ஊழல் குறித்து பேச அக்கட்சிக்கு தகுதியே கிடையாது.

ஊழல் குறித்து பாடம் எடுக்க அவர்கள் யார். முதலில் தனது கட்சியில் உள்ள பிரச்சினைகளை பாஜக சரி செய்யட்டும். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது ஊழல் குறித்த புகார்கள் வந்தபோது உடனடியாக நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். ஆனால் கர்நாடக முதல்வர் எதியூரப்பா மீது ஆதாரப்பூர்வமாக எதிர்க்கட்சிகள் புகார்களை சுமத்தியபோது அதுகுறித்து பாஜக ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று வரை எதியூரப்பா பதவியில் நீடித்து வருகிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக ஜேபிசி விசாரணை நடத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவும், சிபிஐயும் விசாரணை நடத்தி வரும் நிலையில் ஜேபிசி விசாரணை அவசியமே இல்லாதது. மேலும் ஒரு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிமுன்பும் இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது. ஆனால் இந்தக் கோரிக்கைக்காக நாடாளுமன்றத்தின் முத்தான நேரத்தை இப்படி எதிர்க்கட்சிகள் வீணடித்ததை நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள், மன்னிக்க மாட்டார்கள் என்றார் சோனியா காந்தி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி