ஐ.பி.எல். 4-வது கிரிக்கெட் போட்டித் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ளது. இதில் கொல்கட்டா அணியில் கங்கூலி நீடிப்பார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் கங்கூலியை தங்களது அணியில் நீட்டிக்கவில்லை. எனவே அவரும் திராவிட், கும்ளே, கம்பீர், யுவ்ராஜ் சிங் ஆகியோருக்கு அடுத்தபடியாக பொது ஏலத்திற்கு வந்துள்ளார்.
அதாவது வீரர்களைத் தக்கவைப்பதன் மூலம் அணி உரிமையாளர்களுக்கு பெருமளவு பணம் முதலீடு செய்யப்பட்டு முடங்கி விடும் என்று தெரிகிறது.உதாரணமாக் மும்பை இந்தியன்ஸ் 4 வீரர்களை தக்கவைக்கிறது என்றால் வீரர் ஒருவருக்கு 1.8மில்லியன் டாலர்கள் தொகையை அவர்கள் இழக்கின்றனர்.
அதாவது பாதி பட்ஜெட் தொகை இவர்களை தக்கவைக்கவே சென்று விடுகிறது. எனவே வீரர்களை தக்கவைத்தால் புதிய வீரர்களை எடுப்பதில் பண நெருக்கடி ஏற்படும் என்று தெரிகிறது. இதனால் டெக்கான் சார்ஜர்ஸ் அணி எந்த வீரரையும் நீட்டிக்கவில்லை என்று தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி