செய்திகள் ராஜபக்ஷே! நீ நிம்மதியாய் தூங்கி எவ்வளவு நாட்கள் ஆயிற்று!!!

ராஜபக்ஷே! நீ நிம்மதியாய் தூங்கி எவ்வளவு நாட்கள் ஆயிற்று!!!

ராஜபக்ஷே! நீ நிம்மதியாய் தூங்கி எவ்வளவு நாட்கள் ஆயிற்று!!! post thumbnail image

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

ஒரு வெற்றி மனிதனுக்கு நிம்மதியை தர வேண்டும், அது தான் அவனை பலப்படுத்தும் ஆனால் பல்லாயிரம் தமிழர்களை கொன்று சரணடைந்த விடுதலைபுலிகளை விலங்குகளை போல் வேட்டையாடி ராஜபக்ஷே ஈட்டிய வெற்றி இனி அவனை தூங்கவிடாது…துரத்துகின்ற போற்குற்றமும் தினந்தோறும் வெளிவரும் அவனது சிங்கள படைகள் செய்த போர்குற்ற செயல்களும் இனி அவன் தங்க கூண்டில் இருக்கும் கிளி வாழ்கை தான்.

விடுதலை புலிகள் தான் எந்த ஒரு சமரசத்திற்கும் தடை என்று வாய் கிழிய கத்திய சிங்கள,இந்திய கனவான்கள் இப்பொழுது எங்கே இருகிறார்கள் என்று தெரியவில்லை. போர் முடிந்து ஆண்டுகள் கடந்தும் எந்த வித முன்னேற்றமும் இல்லாத அதிகார பகிர்வு…இனி என்றுமே கிடைக்க போவதில்லை என்பது தான் நிதர்சனம்.

விடுதலை போராளிகள் அமெரிக்கவின் உபயத்தால் பயங்கரவாதிகள் ஆன பிறகு இனி எல்லா போரட்டங்களும் அரசபயங்கரவாதத்தால் நசுக்கப்படும் அதற்கு உலக நாடுகள் அனைத்தும் ஒத்துழைக்கும். மனித உரிமை,போர்குற்றம் எல்லாம் அந்த அந்த நாடுகளை அவர்கள் வழிக்கு கொண்டு வர மட்டுமே பாதிக்கபட்டவர்களுக்கு அதனால் எதுவும் கிடைக்கப் போவதில்லை.

ஐ.நா சபை எனும் உலக நாடுகளின் சங்கம் பெருவாரியாய் பிடிக்காத நாடுகளை பழி வாங்க மட்டுமே பயன்படுத்தபடுகிறது. பல நூற்றாண்டுகள் அடிமைபட்டு கிடந்த இந்தியவினால் காஷ்மீர் பிரச்சனையை சீர் தூக்கி பார்க்க தெரியவில்லை என்றால் இலங்கையை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

காந்தி அன்று நேருவிடம் பிரதமர் பதவியை ஜின்னாவிற்கு விட்டு தர சொன்னார் ஒரு வேளை இந்த காஷ்மீர் பிரச்சனையே இல்லாமல் போயிருக்கும். நேருவின் பதவி சுகம் அதை விட்டு தர மனம் வரவில்லை…அந்த பாரம்பரியத்தில் வந்த காங்கிரஸிடம் நாம் எதை எதிர்பார்க்கமுடியும்.

ஈழத்தமிழர்கள் அடிமைகளாய் நடத்தப்படும் வரை இலங்கையில் அமைதி திரும்பப் போவதில்லை…
பிரச்சனையின் மூலத்தை களைய நினைக்காமல் பிரச்சனை செய்பவர்களை களைய நினைப்பது மிக பெரிய முட்டாள்தனம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி