ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை தலித் பிரச்சினையாக்கி, ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தை திசை திருப்பப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உத்தமத் தலைவராக இருந்த காமராஜ், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஆகியோர் இருந்தபோதும், வாழ்ந்தபோதும் பொது வாழ்க்கையில் தூய்மையை கட்டிக்காத்து வந்தனர்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜா சிக்கியதற்கு முழு காரணம் கருணாநிதிதான். ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கு என்ன என்பதை காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும். நிரா ராடியா, கனிமொழி உரையாடல்களை பத்திரிகைகள் வெளிச்சம் போட்டு காட்டியிருப்பதை கருணாநிதியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
ஸ்பெக்ட்ரம் ஊழலை திசை திருப்புவதற்காக ஆரியம், திராவிடம் என கருணாநிதி பேசுகிறார். இது மக்களிடம் எடுபடாது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு பிரச்சனையை தலித் பிரச்சனையாக திசை திருப்புகிறார். ஸ்டெக்ட்ரம் ஊழலால் தி.மு.க. வுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.தி.மு.க. வை மொத்தமாக குறை சொல்லமாட்டேன்.
தி.மு.க. வுக்காக தங்கள் சொத்துக்களை விற்று கட்சியை வளர்த்த தொண்டர்கள் உள்ளனர்.மதுரையில் நடந்த தனது பேரன் திருமண விழாவில் மணமக்களை, தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி போல வாழ வேண்டும் என கருணாநிதி வாழ்த்தினார். இப்படி பேசி 10 நாள் கூட ஆகவில்லை. அதற்குள் தற்போது காங்கிரஸ் கூட்டணி பற்றி ஏதோதோ பேசுகிறார்.கருணாநிதிக்கு தன் குடும்பம், மக்களிடம் நிறைய பயம் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி