காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் ஜெகன்மோகன் ரெட்டி. தனது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பெயரி்ல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை அவர் தொடங்குகிறார்.
இதையடுத்து தனது கடப்பா தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் மீரா குமாருக்கு பேக்ஸ் அனுப்பினார்.
அவருடன் அவரது தாயார் விஜய்லட்சுமியும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவரும் தனது புலிவந்தலா தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து ஆந்திர சட்டமன்ற சபாநாயகர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பிவிட்டார்.
ஆந்திராவில் முதல்வர் பதவியை எதிர்ப்பார்த்த ரெட்டிக்கு அந்தப் பதவியை காங்கிரஸ் தலைவர் சோனியா வழங்காததால் இந்த முடிவை எடுத்துள்ளார்.
அவருடன் அவரது ஆதரவு எம்பிக்கள் சிலரும், சுமார் 30 எம்எல்ஏக்களும் ராஜானமா செய்வர் என்று தெரிகிறது. ஆனாலும் அரசுக்கு எந்தப் பிரச்சனையும் வராது என்று தெரிகிறது.
இருப்பினும் ஜெகன்மோகன் ரெட்டியால் ஏற்படும் சரிவை சமாளிக்க நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் ஆதரவைப் பெற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அவருடன் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர். சிரஞ்சீவி கட்சிக்கு 18 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி