உலகம் முழுவதும் 10 கோடி தமிழர்கள் உள்ளனர். இந்தத் தமிழ் இனத்துக்கு என தனியாக ஒரு நாடு கூட இல்லை. தமிழ் தேசம் ஒன்று உருவாக வலியுறுத்தி சென்னையில் அடுத்த மாதம் இறையாண்மை மாநாடு நடத்தப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். சேலம், நாமக்கல், தர்மபுரி, வேலூர், கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட 8 மாவட்டங்களை உள்ளடக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழர் இறையாண்மை மாநாடு விளக்கக் கூட்டம் சேலத்தில் நடந்தது. அதில் பேசிய திருமாவளவன், தமிழ் இனத்திற்காக தமிழ்தேசம் ஒன்று உருவாக வேண்டும்.
அதை சர்வதேச சமுதாயம் அங்கீகரிக்க வேண்டும். உலகம் முழுவதும் 10 கோடி தமிழர்கள் உள்ளனர். இந்தத் தமிழ் இனத்துக்கு என தனியாக ஒரு நாடு கூட இல்லை. தமிழ் தேசம் ஒன்று உருவாக வலியுறுத்தி சென்னையில் அடுத்த மாதம் இறையாண்மை மாநாடு நடத்த இருக்கிறோம்.
தமிழக அரசியலில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த 3வது பெரிய சக்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உருவாகியுள்ளது. நாம் நடத்தும் இறையாண்மை மாநாடு வரும் சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும். அதன் மூலம் சட்டமன்ற தேர்தலில் நாம் போட்டியிட்டு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற வேண்டும். அதற்காக இறையாண்மை மாநாட்டில் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி