அரசியல் கருணாநிதியின் சொத்து பற்றி ரஜினிகாந்த்

கருணாநிதியின் சொத்து பற்றி ரஜினிகாந்த்

Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper,Tamilnadu politics,kollywood,Tamil Cinema

முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌யி‌ன் சொ‌த்து‌க்க‌ள் அழ‌கி‌ரி, ‌ஸ்டா‌லி‌ன் எ‌ன்று நடிக‌ர் ர‌‌ஜி‌‌னிகா‌ந்‌த் கூ‌றினா‌ர். மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சருமான மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி – அனிஷா திருமணம் இன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த மணவிழாவில் மணமக்களை வாழ்த்தி நடிக‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌‌த் பேசுகை‌யி‌ல், தனக்கும், அழகிரிக்கும் மிகச் சிறிய காலமே நட்பு ஏற்பட்டபோதிலும் அது நீண்டகால நட்பு போல சிறந்து விளங்குகிறது என்று தெரிவித்தார்.

தி.மு.க.வின் சொத்து முதலமைச்சர் கருணாநிதி என்றும், அவரது சொத்து அழகிரியும், ஸ்டாலினும் என்றும் கூறிய ரஜினிகாந்த், இந்த சொத்து அந்த சொத்தை பாதுகாக்க வேண்டும், அந்த சொத்து இந்த சொத்தை காக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி