2004 லோக்சபா தேர்தலின்போது எனது ஆதரவைப் பெறுவதற்காக என்னுடன் பேரம் பேசியது காங்கிரஸ் . நான் ஆதரவு தருவதாக இருந்தால் தாஜ் காரிடார் வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்குளை கைவிடுவதாகவும் அவர்கள் கூறினர் என்று தெரிவித்துள்ளார் உ.பி. முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி.
ஆனால் காங்கிரஸின் இந்தப் பேரத்தை நான் நிராகரித்து விட்டேன். மக்ள் கோர்ட்டில் என்னை நிரூபித்துக் கொள்கிறேன் என்று காங்கிரஸிடம் கூறி விட்டேன். வருகிற 2012 சட்டசபை பொதுத் தேர்தலை தனியாக சந்திப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் பேசிய மாயாவதி, 2004 தேர்தலில் எனது ஆதரவைப் பெற கடுமையாக முயன்றது காங்கிரஸ். என் மீதான இரு முக்கிய வழக்குகளையும் வாபஸ் வாங்கி விடுகிறோம், ஆதரவு தாருங்கள் என்று பேரம் பேசினார்கள்.
உண்மையில் இந்த இரு வழக்குகளுமே என் மீது பாஜகவால் போடப்பட்ட பொய் வழக்குகளாகும். எனவே இதை நான் மக்கள் நீதிமன்றத்தில் நிரூபித்துக் கொள்கிறேன் என்று காங்கிரஸிடம் கூறி விட்டேன். ஆனால் அவர்களோ, உ.பியில் உள்ள 80 சீட்களில் 60 சீட்களில் நீங்கள் போட்டியிடுங்கள், நாங்கள் 20 சீட்களில் போட்டியிடுகிறோம் என்று கெஞ்சிப் பார்த்தனர். ஆனால் நான் நிராகரித்து விட்டேன் என்று கூறியுள்ளார் மாயாவதி
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி