ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மத்திய அமைச்சரவையில் மாற்றம் வருமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, எனக்கு உடம்பு சரியில்லை, பிறகு பார்க்கலாம் என்று கூறி நழுவி விட்டார் தொலைத் தொடர்பு அமைச்சர் ராசா.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சமீபத்தில் மத்திய அரசை கடுமையாக கண்டித்திருந்தது உச்சநீதிமன்றம். அதேபோல சிபிஐயும் கண்டனத்துக்குள்ளானது.
இதுகுறித்து ஊட்டிக்கு வந்த அமைச்சர் ராசாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதுதொடர்பாக அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிக்க மறுத்து விட்டார்.
இருந்தாலும் தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்டதைத் தொடர்ந்து ராசா கூறுகையில்,
உச்ச நீதிமன்றத்தில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் இறுதித் தீர்ப்பு அல்ல. இதுதொடர்பாக எனது வழக்கறிஞர்களுடன் இதுவரை ஆலோசிக்கவில்லை. அவர்களிடம் பேசிய பின்னரே கருத்து கூற முடியும். இப் பிரச்னையை நானே பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
அமைச்சரவை மாற்றப்படுமா என்ற கேள்விக்கு அவர் எனக்கு இப்போது உடல் நிலை சரியில்லை. பிறகு பார்க்கலாம் என்று கூறி நழுவி விட்டார்
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி