அரசியல்,முதன்மை செய்திகள் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியே…

டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியே…

dugles devananda with Manmohan singh

முன்பு சென்னையில் தங்கியிருந்தபோது கொலை, கொள்ளை மற்றும் குழந்தை கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்ட, இலங்கையின் இப்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரு தேடப்படும் குற்றவாளியே என சென்னை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்நாட்டில் தங்கி இருந்தபோது 1986-ம் ஆண்டில் சென்னை சூளைமேட்டில் துப்பாக்கி சூட்டில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் டக்ளஸ் தேவானந்தா குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை சென்னை 4-வது கூடுதல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு டக்ளஸ் தேவானந்தா கோர்ட்டில் ஆஜராகாததால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து 1994-ல் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்தியா வந்த டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமை கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த நிலையில் டக்ளஸ் தேவானந்தா, அறிவிக்கப்பட்ட குற்றவாளி என அறிந்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி அக்பர்அலி இந்த வழக்கின் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு இருந்தார்.

இந்த வழக்கு சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை முடிந்து, அரசின் அறிக்கைக்காக தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கில், கடந்த 1994-ம் ஆண்டு அவரை தேடப்படும் குற்றவாளி என அறிவித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது உண்மைதான் என்றும், அவர் இப்போதும் ஒரு தேடப்படும் குற்றவாளியே என்றும் கூறினார்.

டக்ளஸ் தேவானந்தா கடந்த சிலமாதங்களுக்கு முன் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு வந்தார். பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து கைகுலுக்குப் பேசி்னார்.

ஒரு தேடப்படும் குற்றவாளி இந்தியப் பிரதமரைச் சந்தித்தது இதுவே முறை!

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி