உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தின் போது புகழ்பெற்ற போல் ஒக்டோபஸ் இன்று செவ்வாய்க்கிழமை ஜேர்மனியில் திடீரென உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக போல் பாராமரிக்கப்பட்டு வந்த மீன் காட்சியக ஊழியர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர்கள்,
" போல் ஒக்டோபஸின் எதிர்பாராத மரணம் எங்களை கடும் சோகத்திற்கு ஆளாக்கியுள்ளது. இரவு உறக்கத்திலேயே அது உயிரிழந்துள்ளது. அதன் நினைவாக அது புதைக்கப்படவுள்ள இடத்தில் நினைவுத் தூபியொன்றை நிர்மாணிக்க உத்தேசித்துள்ளோம்" எனத் தெரிவிக்கின்றனர்.
இவ்வருடம் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற உலகக்கிண்ன உதைபந்தாட்ட போட்டிகளில் ஜேர்மனி பங்குபற்றிய மற்றும் இறுதிப்போட்டி ஆகியவற்றின் வெற்றியாளர்களை முன்கூட்டியே, சரியாகத் தெரியப்படுத்தி ஒக்டோபஸ் பெரும் புகழடைந்திருந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி