வடகொரியா மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்த முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வடகொரியா கடந்த 2006 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் அணுகுண்டு சோதனை நடத்தியது. இதையடுத்து வடகொரியாவு மீது அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபை பல்வேறு தடைகளை விதித்தன.
இந்நிலையில் வடகொரியா தற்போது மீண்டும் அணுகுண்டு சோதனைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வடகொரியாவின் புன்கயேரி என்ற இடத்தில் சமீபகாலமாக வாகன நடமாட்டம் அதிகமாக இருப்பதை அமெரிக்க செயற்கை கோள் படம் பிடித்து உள்ளது.
இது அணுகுண்டு சோதனை நடத்துவதற்கான ஏற்பாடு தான் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தென்கொரியா பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி