லலித் மோடி மீதான ஊழல் விசாரணைக் குழுவை மாற்றி அமைக்கக் கோரியதை மறுத்துள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் லலித் மோடியுடன் சமரசத்திற்கு இடமில்லை என்றும் கூறியுள்ளது.
கடந்த இரவு விசாரணைக் குழுவில் உள்ள அருண் ஜெட்லி, லலித் மோடியின் வழக்கறிஞர்களான மொகமட் ஆப்தி மற்றும் ராம் ஜெத் மிலானி ஆகியோர் சமரசத் தீர்வுக்கு பேச்சு வார்த்தை நடத்தியதாக பத்திரிகைகளில் செய்திகள் அடிபட்டன.
சந்திப்பு நிகழ்ந்தது என்பதை ஒப்புக் கொண்ட பி.சி.சி.ஐ. அங்கு சமரசத்திற்கான சமன்பாடுகள் எதுவும் நிகழவில்லை என்று கூறியுள்ளது.
அருண் ஜெட்லியும், ராம்ஜெத் மிலானியும் நேற்று சந்தித்தது வேறு விவகாரத்திற்காக, அது பி.சி.சி.ஐ. தொடர்பான சந்திப்பல்ல என்று பி.சி.சி.ஐ. மறுத்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி