அரசியல் என் மீது போட்டதைப் போல ரஜினி மீது தீவிரவாத வழக்கு போட முடியுமா?

என் மீது போட்டதைப் போல ரஜினி மீது தீவிரவாத வழக்கு போட முடியுமா?

sanjaydutt

என் மீது போட்டதைப் போல ரஜினி மீது தீவிரவாத வழக்கு போட முடியுமா? சஞ்சய் தத் கேட்கிறார்

என் மீது தீவிரவாத வழக்குப் போட்டது போல ரஜினிகாந்த் மீது யாராவது வழக்கு போட முடியுமா?. போட்டால் தமிழகத்தில் சும்மா இருப்பார்களா? என்று கேட்டுள்ளார் நடிகர் சஞ்சய் தத்.

மும்பையில் பல ஆண்டுகளுக்கு முன்பு தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்தது தொடர்பாகவும், ஆயுதம் வைத்திருந்தது தொடர்பாகவும் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர் சஞ்சய் தத். தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.

இந்த நிலையில் வித்தியாசமான கேள்வி ஒன்றைக் கேட்டுள்ளார் சஞ்சய் தத். இதுதொடர்பாக ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,

எனக்குப் பிரச்சினை ஏற்பட்டபோதெல்லாம் இந்தித் திரையுலகில் யாருமே எனக்கு துணை நிற்கவில்லை. யாருமே என்னை ஆதரிக்கவில்லை.

சிறைவாசத்தின்போது நான் நிறைய கற்றுக் கொண்டேன். சிறைவாசம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. இதை நான் ஒப்புக் கொள்கிறேன். பொறுமையுடனும், சகிப்புத்தன்மையுடனும் இருக்கக் கற்றுக் கொண்டேன்.

நான் முதன் முதலில் கைது செய்யப்பட்டபோது, என்னைப் பற்றி ஒரு திரையுலகப் பிரமுகர் கூட கவலைப்படவில்லை. என்னுடன் தொடர்பு இல்லாதது போல காட்டிக்கொள்ளவே முயன்றனர்.

பின்னர் நான் அரசியல் தொடர்புகளை உருவாக்கிக் கொண்டபோதும் என்னை விட்டு விலகி ஓடவே அனைவரும் முயன்றனர், விரும்பினர். அப்போதெல்லாம் அவர்கள் மீது எனக்குக் கோபம் வரும்.

ஆனால் போகப் போக நான் அதைப் பழகிக் கொண்டு விட்டேன். இப்போதெல்லாம் அதுகுறித்து நான் கவலைப்படவில்லை.

எனக்கு நானே கேட்டுக்கொள்வேன், அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் நாம் அவர்களை ஆதரிப்போமா என்று கேட்டுக்கொள்வேன்.

அந்த சம்பவங்களை, அந்த நாட்களை மறக்கவே முயலுகிறேன். ஒரு வேளை வேறு யாருக்காவது இப்படி நேர்ந்தால் நான் கூட இப்படித்தான் இருப்பேனோ என்னவோ தெரியவில்லை.

அதேசமயம், ஒரு துறையைச் சேர்ந்த ஒருவருக்குப் பிரச்சினை என்றால் அத்துறையைச் சேர்ந்த அனைவருமே துணை நிற்க வேண்டும். அப்படி நின்றால் இதுபோன்ற பிரச்சினைகளை தொடர்ந்து நம்மைத் துரத்திக் கொண்டிருக்காது என்று கருதுகிறேன்.

ரஜினிகாந்த் மீது யாராவது தீவிரவாத செயல் புரிந்தார் என்று வழக்கு போட முடியுமா. அப்படி செய்தால் தமிழகத்தில் என்ன நடக்கும். யாரும் அவர் மீது வழக்குப் போட முடியாது. அதுதான் ஒரு சினிமா நட்சத்திரத்திற்கு தமிழகத்தில் உள்ள சக்தி. ஒட்டுமொத்த தென்னிந்தியத் திரையுலகமே ரஜினிக்கு ஆதரவாகத் திரளும். ஆனால் பாலிவுட்டில் அப்படி இல்லை என்பது வருத்தத்திற்குரியது என்று கூறியுள்ளார் சஞ்சய் தத்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி