சர்வதேச அளவில் கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் ?ஆப்பிள்-ஐ-போன்-4? என்ற பெயரில் புதிய ரக செல்போன்களை அறிமுகப் படுத்தி உள்ளது. இதில் உள்ள உலக வரைப்படத்தில் அருணாசல பிரதேசம் சீனாவில் இருப்பது போல் வரையப்பட்டுள்ளது. இதையறிந்ததும் இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவின் வட பகுதியான இமயமலையில் அமைந்துள்ள அருணாசல பிரதேசத்தை சீனா கடந்த பல ஆண்டுகளாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனாலும் சீனா அருணாசல பிரதேசத்தை ஒட்டி ஏராளமான ராணுவ படைகளை குவித்துள்ளது. அடிக்கடி சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் புகுந்தும் அட்டூழியம் செய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் இந்தியாவும் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.
இது பற்றி அருணாசல பிரதேசத்தை சேர்ந்த சர்மா கூறும் போது, அருணாசல பிரதேசம் இந்தியாவுக்கு சொந்தமானது. அதை சீனா சொந்தம் கொண்டாடுவதை ஏற்க முடியாது. அருணாசல பிரதேசத்தை இந்தியா ஒரு போதும் சீனாவுக்கு விட்டுத் தரக்கூடாது. செழிப்பான அருணாசல பிரதேச மாநிலம் முழுவதையும் ஆக்ரமிக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதை மத்திய அரசு இப்போதே தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
ஆப்பிள் நிறுவனம் சீனாவில் விற்பனையை அதிகரிப்பதற்காக தங்களது செல்போன்களில் உள்ள உலக வரைப்படத்தில் அருணாசல பிரதேசம் முழுவதும் சீனாவில் இருப்பது போன்று வடிவமைத்துள்ளது.
இந்த போன்கள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சீன தலை நகர் பீஜிங்கில் விற்பனைக்கு அனுப்பப்பட்டது. 4 நாட்களில் இதன் விற்பனை ஒரு லட்சத்தை தாண்டியது. மேலும் 1 லட்சம் போன்களுக்கு ஆர்டர் குவிந்துள்ளது.
சீனாவில் தங்களது விற்பனையை பெருக்கு வதற்காக அந்நிறுவனம் சீனாவுடன் அருணாசலப் பிரதேசம் இருப்பது போன்ற உலக வரைபடத்தை செல்போன்களில் உருவாக்கி இருப்பதாக இந்தியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
செல்போன் உலக வரை படத்தில் அருணாசல பிரதேசத்தை இந்தியாவுடன் இருப்பது போல் வரைந்தால் சீனர்கள் வாங்க மாட்டார்கள் என்று அந்நிறுவனம் கருதி இருக்கலாம். இதனால் தான் இது போன்ற வரை படத்தை அந்நிறுவன நிர்வாகிகள் வரைந்திருப்பதாக சீன இணைய தளம் பரபரப்பான செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளது.
?ஆப்பிள்-ஐ-போன்-4ன் விற்பனை சீனாவில் பல மடங்கு அதிகரித்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் மேலும் 2 லட்சம் போன்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம் என்று அந்நிறுவன நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக உலக வரைபடத்தில் அருணாசல பிரதேசம் இந்திய பகுதிக்குள் இருப்பது போன்ற வரைபடங்களை சீன அரசு ஏற்பதில்லை. அங்கு வரைபடங்கள் உருவாக்கும் நிறுவனங்களுக்கும் பல் வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் வடபகுதியை ஒரு புறம் குறி வைத்த சீனா தற்போது தென் பகுதியையும் ஆக்ரமிக்க துடிக்கிறது. இதற்காக இலங்கையின் வன்னி பகுதியில் சீன ராணுவ அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் கட்டப்படுகிறது. அங்கு விமான தளம் மற்றும் கப்பல் தளங்களும் தனது சொந்த செலவில் அமைத்து வருகிறது.
ஈழ தமிழர்களை கம்பி வேலி முகாம்களுக்குள் அடைக்க உத்தரவிட்ட சீனா, தமிழர்கள் வசித்த பகுதிகளில் ரகசியமாக ராணுவ தளம் அமைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறது.
இதனால் தென்னிந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி